கொரோனா தொற்றாளர்களை பராமரிப்பதற்காக அதிக காலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்களது குடும்ப சகிதம் இலங்கையில் உள்ள அதிசொகுசு விடுதிகளில் இரண்டு மூன்று நாட்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியால் சுகாதார செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் கொவிட் 19 தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது நோயாளர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சருக்கு தெளிவுப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், மேற்குறித்த விடயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜிவ முனசிங்கவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உரிய உணவு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தமது பொறுப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் #கொரோனா #சுகாதாரபணியாளர்கள் #விசேடசலுகை #அதிசொகுசுவிடுதி #பவித்ரா