171
மிரிஹான பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரான 53 வயதான சுனில் ஜயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில், முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதனையடுத்து இடம்பெற்ற தாக்குதலிலேயே இவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #தாக்குதல் #முச்சக்கரவண்டி #தலைவர் #உயிரிழப்பு
Spread the love