Home உலகம்பிரேசில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1300 பேர் பலி :

பிரேசில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1300 பேர் பலி :

by admin

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரேசிலில் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 7.75 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ள அதேவேளை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது. #பிரேசில்  #கொரோனா #பலி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More