Home உலகம் எனது வியட்நாம் பாட்டி தமிழில்: சா. திருவேணிச் சங்கமம்…

எனது வியட்நாம் பாட்டி தமிழில்: சா. திருவேணிச் சங்கமம்…

by admin


எண்பதுவயதிலும் எனதுபாட்டிஉடற் பலத்துடனேயே இருந்தாள். அவளதுசொந்தப் பற்களால் சோளக் கதிரைமென்றுசாப்பிடவும்,கரும்பைக் கடித்துசக்கையைத் துப்பவும் முடிந்தன. இருநாட்களுக்கொருதடவைஉணவுப் பொருட்கள் நிறைந்தபாரமான கூடையைச் சுமந்துகொண்டுஒருமணித்தியாலயம் நடந்துசந்தைக்குச் செல்வாள். பின்னர் அதேயளவுநேரம் நடந்துதிரும்பிவருவாள். மிகவும் வயதாகிவிட்டபோதிலும் அழகின் அடையாளங்கள் அவளில் மறைந்துபோகவில்லை. அவளின் கைகள்,கால்கள்,முகம் எல்லாம் ஒருகாலத்தில் கவர்ச்சிகரமான இளம் பெண்ணாகஅவள் இருந்திருக்கிறாள் என்பதைவெளிப்படுத்தின. காலத்தால் அவளின் இளமையின் தன்மையைமுற்றிலும் வழித்தெறியமுடியவில்லை.

நாடகம் அவளின் விருப்பமானவிசயங்களில் ஒன்று. இந்தஈடுபாடுவயதானதால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. பட்டணத்துக்குயாராவதுநாடகக் குழுவினர் வந்துநிற்கும் போதுஅவள் எவ்வளவுமுக்கியவேலையில் ஈடுபட்டிருந்தபோதிலும் ஒருகாட்சியையாவதுதவறவிடமாட்டாள். அப்படிபலநாட்கள் யாரும் வராவிட்டால் தனதுசொந்தநாடகம் ஒன்றுக்கானஒத்திகைசெய்யமுனைந்துவிடுவாள். ஒரேநேரத்தில் அதன் மெனேஜராகவும்,தயாரிப்பாளராகவும் அவளேதொழிற்படுவாள். பெரும்பாலும் எனதுபாட்டியின் நாடகங்கள் மெல்லிசைவிரவியதாகவும் சுபமுடிவுகொண்டனவாகவும் காணப்படும். கதாநாயகன் கடைசியில் கதாநாயகியைத் திருமணம் செய்து இனிதேவாழ்ந்திருப்பதாகவேஎப்போதும் முடிவுறும். கதாநாயகனாகபேரப்பிள்ளைகளில் தனக்குமிகவிருப்பமானஒருவனையேஅவள் தேர்ந்தெடுப்பாள். கிழட்டுவயதில் கதாநாயகிவேஷமாஎன்றுஎனதுசகோதரிகள் கேட்பார்கள். ‘மனதில் இளமையைக் கொண்டிருக்கும் எவரும் இப்பாத்திரமேற்றுநடிக்கமுடியும்’. என்றுபாட்டிஅவர்களுக்குச் சொல்லுவாள்.

தான் மனசாரவிரும்பிக் காதலித்தஒருவரையேபாட்டிமணந்திருந்தாள். ஆனால் அவர் முற்றுமுழுதாகஅவளிலிருந்துவேறுபட்டவர். மிகவும் கூச்சசுபாவம் உள்ளவர். சத்தம் போட்டுச் சிரிக்கவேமாட்டார். மெதுவாகத்தான் பேசுவார். பாட்டியைப்போலஉடல்வலுவுள்ளவருமல்ல. தான் ஒரு’கல்விமான’ ஆக இருப்பதால்தான் நோஞ்சானாக இருக்கின்றேன் என்றுசாட்டுசொல்வார். கல்யாணம் முடித்தபுதிதில் எனதுபாட்டனாரும் பாட்டியாரும் ஒருஹோட்டலுக்குப் போயிருந்தார்கள். ஒருநோஞ்சான் பயல் அழகான இளம் பெண்ணைமனைவியாகக் கொண்டிப்பதைக் கண்டரவுடிஒருவன் பாட்டனாரைநையாண்டிபண்ணத் தொடங்கினான்.

‘ஏய் சூம்பல் கோழி, இதெல்லாம் உனக்குரிய இடமில்லை’என்றவாறானகேலிப்பேச்;சுக்களுடன் ஆரம்பித்தான். வெலவெலத்துப்போனபாட்டனார் சாப்பிட்டதுபாதிசாப்பிடாததுபாதியாகஹோட்டலைவிட்டுவெளியேறஆயத்தமானார். பாட்டிஅவரின் சேட்டைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமரும்படிசாடைகாட்டினாள். ஒன்றும் நடக்காதமாதிரிதொடர்ந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

தனதுநையாண்டிப் பேச்சுக்களால் ஒருவிளைவும் ஏற்படாததுகண்டுசலிப்படைந்தரவுடி இருக்கையைவிட்டுஎழுந்துஅவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தமேசைக்குவந்தான். பாட்டனாரின் சாப்பாட்டுக் குச்சிகளைப் பறித்தான். பாட்டிபாய்ந்துஅவனிடமிருந்தகுச்சிகளைப் பிடுங்கிக் கொண்டுஅவன் கன்னஎலும்பில் தனதுமுழங்கையினால் அடியொன்றுவிட்டாள். அவ்வடிமிகவும் பலமானதாகவும் விரைவானதாகவும் இருந்ததால் அவன் நிலைதடுமாறிநிலத்தில் விழுந்தான்.தெருவோரக் காடையர்கள் செய்வதுபோல் மேலும் அவனைத் தாக்கிஎழும்பாமல் பண்ணுவதற்குப் பதிலாகபாட்டிஆளைஎழும்பவிட்டாள். அவன் எழும்பியஉடன் இடையிலிருந்தமேசைக்குஉதைத்தாள். அதிலிருந்தஉணவுகளும்,பானங்களும் எங்கும் சிதறின. இனிமேலும் அவன் ஏதும் செய்வதற்கிடையில் அவனதுமோவாயில் பாட்டிஒருஉதைவிட்டாள். அப்படிஒருவிரைவானஅடியைப் பாட்டனார் ஒருபோதும் கண்டதே இல்லையாம். தடாரென்றுசத்தம் மாத்திரமேஅவருக்குக் கேட்டதாம். பின்னர் அவர் கண்டதுஅவன் கரணமடித்துநிலத்தில் மயங்கிக் கிடப்பதைத்தானாம்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தனர். அந்தஹோட்டல் முதலாளிக்கு இனி இல்லைஎன்றசந்தோஷம். இந்தரவுடிஒவ்வொருநாளும் வந்துவயிறுபுடைக்கஉண்டுகுடித்துவிட்டுகாசுகொடுக்காமல் போய்விடுவான். அந்தப் பகுதியில் பெரியகராட்டிக் காரனாகஅவன் இருந்தமையால் ஹோட்டல் முதலாளிஅவனைஎதிர்க்கப்பயப்பட்டார். ரவுடியின் கூட்டாளிகள் அவனைஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கமற்றயாவரும் பாட்டியைச் சூழ்ந்துகொண்டனர். யார் அவளுக்குகராட்டிசொல்லிக் கொடுத்ததுஎன்றுஎல்லோரும் வினவினர்.

‘வேறு யார்?எனதுபுருசன் தான்’என்றுபாட்டிபதிலளித்தாள். ஹோட்டலில் நடந்தசண்டைக்குப் பின்னர் பாட்டனார் கராட்டியில் பெரியபயில்வான் என்றுமக்கள் எண்ணத் தொடங்கினர். தனதுகராட்டிஅடிஆட்களைக் கொன்றுவிடக் கூடும் என்றபயத்தினால்தான் அதைஅவர் பாவியாமல் இருக்கிறார்,என்றுஅவர்கள் நினைத்தனர். எட்டுவயதில் பாட்டிகராட்டியைதனதுமாமாவி;டமிருந்துகற்றுக்கொண்டாளாம்.

இந்தசம்பவத்துக்குப் பிறகுபாட்டனார் எந்ததொந்தரவுக்கும் உட்பட்டதில்லை. அலுவலகநிமித்தம் பட்டணத்துக்குப் போனால் மதிப்புடன் நடாத்தப்பட்டார். வீதியில் எதிர்ப்படுபவர்கள் மரியாதையாகதலையசைத்துச் சென்றனர்.

ஒருநாட்காலைஎன்னைக் கூட்டிக் கொண்டுபாட்டிவெளியேபுறப்பட்டுவிட்டாள். நாங்கள் அப்பகுதியின் முழுத் தோற்றத்தையும் பார்க்கக்கூடியதானசிறுகுன்றுஒன்றில் ஏறினோம். உச்சியைஅடைந்தபோதுகீழேதெரிந்தநெல் வயல்களையும்,அடிவானத்துமலையையும் அதில் வளைந்துஓடியஆற்றையும் பார்த்தாள். சிறுமியாக இருந்தபோதுஎருமைமாட்டுப் பட்டியைமேய்த்துக் கொண்டு இந்தஆற்றுக்குச் சென்றுவந்திருக்கிறாள். கிராமத்தின் மற்றசிறார்களுடன் சேர்ந்து இதில் நீந்திவிளையாடி இருக்கிறாள்.

பின்னர் நாங்கள் அவளுடையபுருசனையும் செத்துப்போனபிள்ளைகளையும் அடக்கம் செய்திருந்த இடத்துக்குச் சென்றோம். அங்குதனதுகணவனின் கல்லறையைத் தடவியவாறுபாட்டிசொன்னாள்.
‘அன்பே,விரைவில் நானும் உன்னிடம்வந்துவிடுவேன்’

அதன் பின்னர் நாங்கள் தோட்டத்துக்குச் சென்றோம். அங்குதனதுபுருசன் நாட்டியிருந்த பழ மரங்களைப் பாட்டிஉற்றுநோக்கினாள். அவர் தனக்குப் புதியகுழந்தைஒன்றுபிறக்கும் போதுபுதிதாகபழமரக் கன்றைநாட்டுவதுவழக்கம். கடைசியாகநாங்கள் தோட்டத்திலிருந்துவெளியேறும் போதுஎனதுதங்கையும் வந்துஎங்களுடன் இணைந்துகொண்டாள்.வழியில் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தவாத்துக்களுக்குநானும் எனதுதங்கையும் உணவுத் துணுக்குகளைஎறிந்துவிளையாடியவாறுவீடுதிரும்பினோம்.

அன்று இரவுஎனதுபாட்டிசரியாகச் சாப்பிடவில்லை. தலையைவாரிநல்லஆடைகளிலொன்றைஅணிந்துகொண்டாள். அவள் எங்கோதிரும்பவும் வெளியேபோகப் போகிறாள் என்றுநாங்கள் நினைத்தோம். அவ்வாறில்லாமல் நேரேபடுக்கைக்குச் சென்றாள். தன்னைஒருவரும் தொந்தரவுபண்ணக்கூடாதுஎன்றுவேண்டிக் கொண்டாள்.

வீட்டுநாய் ஏதோஅபகாரியம் நிகழப்போகமோப்பம் பிடித்துக் கொண்டதுபோல் நிலைகொள்ளாமல் தவித்தது. வீட்டார் ஒவ்வொருவரையும் பரபரப்பாகஏறிட்டுப்பார்த்தது. சற்றைக்கொருதரம் மெல்லியகுரலில் ஊளையும் விட்டது. நள்ளிரவில் அம்மாஎழுந்துபாட்டிபடுத்திருந்தஅறைக்குச் சென்றபோதுஅவளின் உடலில் உயிர் இருக்கவில்லை. வழமையாகநித்திரைகொள்வதுபோல் கண்களை மூடி அவள் படுத்திருந்தாள். எனதுபாட்டி இறந்துவிட்டாள் என்றஉண்மையைஏற்றுக்கொள்ளஎங்களுக்குவெகுநேரம் பிடித்தது. நான் எப்போதாவதுவீpட்டுத்தோட்டத்தில் அல்லதுவயல்வெளியில் இருக்கும் போதுஅவள் முகம் என் முன்னேதெளிவாகதோன்றுவதுபோல் இருக்கும். பலவருடங்கள் கடந்தபின்பும் அவளோடுகடைசியாகக் கதைத்ததுசிலநாட்களுக்குமுன்னர் தான் நடந்ததுபோலத் தோன்றுகிறது.

குறிப்பு:ஆயிரக்கணக்கானவியட்நாமியர்கள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். இவர்கள் பல்வேறுநிர்ப்பந்தங்களால் தமதுதாய் நாட்டைவிட்டுவெளியேறியவர்கள். தமதுநாட்டுநினைவுகளைநெஞ்சில் நிறுத்தியவர்கள் அவர்களில் பலர். அவர்களில் ஒருவர் ஹுயிங் கங் நுவங். அவர் தனதுநாட்டுநினைவுகளில் தோய்ந்துஎழுதிய நூல் ‘நான் இழந்தநாடு’என்றபெயரில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்துஒருபகுதி இது.

எனதுவியட்நாம் பாட்டி
தமிழில்: சா. திருவேணிச் சங்கமம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More