Home இலங்கைகாற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

by admin

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது ,கடும் காற்று வீசியமையால் , காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிழந்துள்ளார்.  யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோப்பையை சேர்ந்த சந்திர சேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.

தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பகுதியில் இருந்து கைதடி நோக்கி பயணித்துள்ளார். அதன் போது கோப்பாய் – கைதடி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது , திடீரென வீசிய கடும் காற்றினால் மோட்டார் சைக்கிள் நிலை குலைந்துள்ளது. அதன் போது , பின்னால் இருந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு பாலத்துடன் மோதுண்டார்.
அதனை அடுத்து முதியவர் அங்கிருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பயனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். #முதியவர் #உயிரிழப்பு #கோப்பாய்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More