முகக் கவசம் அணிவதனால் கொரோனா வைரஸ் பரவுவது கணிசமான அளவு தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் ஆகிய 3 முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர்கள், நிபுணர்கள் உலகம் முழுவதும் பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அக்கடமி ஆராய்ச்சி யாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், கொரோனாவைத் தடுக்க முகக் கவசம் அணிவது நல்ல பலனை தருவதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு இத்தாலியில், முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியுயோர்க்கில் மட்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமான பின், தினமும் கொரோனாவிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாசிக்கும்போது காற்றின் நீர்த்துளிகள் வழியாக கொரோனா வைரஸ் உள்ளே செல்வதை முகக்கவசம் தடுப்பதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என அமெரிக்க தேசிய அறிவியல் அக்கடமி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் #முகக்கவசம் #கொரோனா #தடுக்கின்றது