இலங்கை பிரதான செய்திகள்

மாமனிதர் கௌரவத்தை நீக்கியதில் உடன்பாடில்லை

இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை. நல்லாட்சியென சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென மாமனிதர் ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கிலுள்ள 87ஆயிரம் கணவனை இழந்த பெண்கள்  சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்துவருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை.
நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட்டும் நம்பியிருக்காது புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவேன். குடும்ப தலைவரை இழந்த குடும்பமொன்றின் வலி என்னவென்பதை நானும் எனது இரு பிள்ளைகளும் நன்கு அறிவோம்.
குறிப்பாக இளம் சமுதாயத்தை மீட்டெடுக்க யுத்த அவலங்களுடன் வாழும் விவசாயிகள் மற்றும் மீனவர்களது வாழ்வியலை கட்டியெழுப்ப என்னால் முடியுமெனவும் அதற்காக பாடுபடுவேன் .
எனது முதன்மை பணியாக கணவனை இழந்த பெண்கள் தொடர்பிலான தரவு தளத்தை உருவாக்கவுள்ளேன். அதற்கு அனைவரது ஒத்துழைப்பினையும் பெற்று அதனை நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.
எனது கணவரது பாதையில் பயணிபேன். கணவரை நேசிக்கும் யாழ்ப்பாண மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கூட்டமைப்பிற்கு அளிக்கின்ற வாக்கில் ஒன்றை தனக்களிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.
அதேவேளை ,  எனது கணவருக்கு மரணத்தின் பின்னராக வழங்கப்பட்ட மாமனிதர் கௌரவத்தை சாவகச்சேரியில் நிறுவப்பட்ட தூபியில் நீக்கியது எனக்கு உடன்பாடனதல்ல.இது தொடர்பில் மேலதிகமாக நான் தற்போது பேசவிரும்பவில்லையெனவும் ஊடகவியலாளரது கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். #மாமனிதர் #கௌரவம் #உடன்பாடில்லை  #ரவிராஜ்   #படுகொலை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.