188
ஆவா குழுவின் முக்கியஸ்தர் என காவல்துறையினரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவரும் , தற்போது பிரான்சில் வசித்து வரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சி பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி அக்காராயன் குளத்தை அண்டிய காட்டு பகுதி ஒன்றில் கடந்த 12ஆம் திகதி கூடிய சில இளைஞர்கள் “சன்னா” என பெயர் பொறிக்கப்பட்டு , அதன் அருகில் கஜேந்திரா கோடரியின் (கஜேந்திரா படத்தில் விஜயாந்த் கையில் இருப்பது) உருவமும் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் அவ்விடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்த போது பலர் தப்பி சென்றிருந்த வேளையில் 30 பேரை காவல்துறையினர் மடக்கிப்பிடிச்சு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை மறுநாள் காவல்துறையினர் கிளிநொச்சி நீதிமன்றி ல் முற்படுத்தியிருந்தனர் அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து 30 பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை கடந்த 15ஆம் திகதி யாழ் மருதனார்மட பகுதியில் உள்ள வீடொன்றில் சன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக யாழ்,மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவுக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றி வளைத்து 26 இளைஞர்களை கைது செய்திருந்தனர்.
அவர்களை யாழ்.காவல்நிலையத்தில் முற்படுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்கள் மீது கேக் வெட்டிய குற்றசாட்டை காவல்துறையினர் சுமத்தாது, சட்டவிரோதமாக கூட்டம் கூடிய குற்றசாட்டி சுமத்தி மன்றில் முற்படுத்தி இருந்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து 26 பேரில் இருவர் 16 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்களையும் அவர்கள் இருவரின் பெற்றோர்களையும் நீதவான் கடுமையாக எச்சரித்து பிணை வழங்கியதுடன் ஏனைய 26 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். #ஆவாகுழு #சன்னா#பிறந்தநாள் #கைது #கிளிநொச்சி
Spread the love