145
உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக் தெரிவித்துள்ள அவர் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 237 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #கைது
Spread the love