கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணய மோசடி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அலுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்
அதேவேளை , முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜயவர்தன ஆகியோர் தமது ருவிட்டர் கணக்குகளில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் அண்மித்துள்ள நிலையில் சர்க்கஸ் ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மகேல ஜயவர்தன போட்டி காட்டிக கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் அவரது சாட்சியங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு சமர்ப்பித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #மகிந்தானந்த #விசாரணை #குமார்சங்கக்கார #மகேலஜயவர்தன #ஆட்டநிர்ணயமோசடி