முதலாவது நிமிடம்
பரவாயில்லை,
இது ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்காது.
இரண்டாவது நிமிடம்
என்னால் இதனைத்தாங்கிக் கொள்ள முடியும்.
எனது தலைவர்கள் இதையிட்டுச் சலித்திருக்கிறார்கள்.
ஒமஹா(Omaha) என்னும் இப் பெருநகரில் மல்கம் எக்ஸ் இதனைத் தாங்கியிருக்கிறார்.
அப்பொழுது மக்கள் அவரின் பக்கம் நின்றிருந்தனர்.
எல்லோரும் இப்போது எனது பக்கமும் நிற்பர்.
நான் உறுதியுள்ளஆண் (மனிதன்)
என்னால் இதனைத் தாங்கிக் கொள்ளமுடியும்.
மூன்றாவது நிமிடம்
எனது முன்னோர்கள் அனுபவித்ததை விடவா இது கடினமானது?
சகோதரா உன்னக்கு என்ன முடியும் என்று காட்டிவிடு.
அதையும்தான் பார்ப்போமே!
நான்காவது நிமிடம்
மார்டின் லுதர்கிங் இப்படி நடக்கும் என முன்பே சொல்லியிருந்தார்.
அச்சம் கொள்ளாதே.
தைரியத்துடன் இரு.
நீ வரலாற்றை எழுதப் போகிறாய்.
எல்லோராலும் அறியப்படப் போகிறாய்
ஐந்தாவதுநிமிடம்
மாட்டின்லுதர்கிங் உனது வலியை ஆயுதமாக்கு என்றார்.
அவர்கள் வலிமையானவர்களாக இருக்கும்போது அவர்களின் கண்களுக்குள் உற்றுப்பார். அது அவர்களைப் பலவீனமாக்கும்.
எல்லோரும் இதனைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் எழுந்து வந்து என்னை விடுதலை செய்வார்கள்.
ஆறாவது நிமிடம்
சகோதரா நான் எங்கும் போகமாட்டேன்
என்னைச் சுவாசிக்க விடு.
என்னைச் சுவாசிக்கவிடு.
ஏழாவதுநிமிடம்
என்னால் சுவாசிக்க முடியவில்லை.
எனக்கு முடியவில்லை.
நான்.
எட்டுநிமிடங்களும் நாற்பத்தியாறு வினாடிகளும்
கனவானே உனக்கு நான் விடுதலை அளித்து விட்டேன்.
நான் இறந்து விட்டேன்.
நான் போய் விட்டேன்.
வரலாற்றில் மீண்டும் எழுதப்பட்டுவிட்டது.
உனது முழங்காலை எனது கழுத்தில் இருந்து எடுத்து விடு.
அம்மா, எனக்காக அழாதே.
ஜிஆனா(Gianna),ஜிஆனா,அன்பே நான் வீட்டுக்குவருகிறேன்.
மூலக்கவிதை: சித்தார்த்தஜிகு SiddharthaGigoo
நன்றி: https://madrascourier.com/art-and-poetry/eight-minutes-forty-six-seconds-to-freedom/
மொழி பெயர்ப்பு தேவ அபிரா