வத்தளை, திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை குறித்த கடலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொரு பெண் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். #வத்தளை #நீரில்மூழ்கி #சிறுவன்
Spread the love
Add Comment