நாவாந்துறை பகுதியில் உள்ள வீடுகளின் மீது நேற்றிரவு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. நாவாந்துறை கென்னடி வீதியில் அமைந்துள்ள வீடுகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அச்சுறுத்தப்பட்டனர்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு ஊரவர்கள் அறிவித்தையடுத்து அங்கு சென்ற சுமந்திரன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.
அதேவேளை அப்பகுதி மக்கள் சுமந்திரனுக்கு தமது ஆதரவையும் , அச்சுறுத்தலுக்கு உள்ளான தமக்கு ஆறுதல் கூறியதற்காக நன்றிகளையும் தெரிவித்தனர். #நாவாந்துறை #தாக்குதல் #சுமந்திரன்