Home இலங்கைநாவாந்துறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த சுமந்திரன்

நாவாந்துறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த சுமந்திரன்

by admin

நாவாந்துறை பகுதியில் உள்ள வீடுகளின் மீது நேற்றிரவு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. நாவாந்துறை கென்னடி வீதியில் அமைந்துள்ள வீடுகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அச்சுறுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு ஊரவர்கள் அறிவித்தையடுத்து அங்கு சென்ற சுமந்திரன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.

அதேவேளை அப்பகுதி மக்கள் சுமந்திரனுக்கு தமது ஆதரவையும் , அச்சுறுத்தலுக்கு உள்ளான தமக்கு ஆறுதல் கூறியதற்காக நன்றிகளையும் தெரிவித்தனர். #நாவாந்துறை  #தாக்குதல் #சுமந்திரன்

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More