பீகார் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த ஓரிரு தினங்களாக இடியுடன் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதுடன் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்னளர். மதுபானி, நவடாவில் தலா 8 பேர், பாகல்பூர், சிவானில் தலா 6 பேர், தர்பங்கா, பங்கா, கிழக்கு சம்பரனில் தலா 5 பேர், ககாரியா, அவுரங்காபாத்தில் தலா 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். #பீகார் #இடிமின்னல் #கனமழை