முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட இன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஊடாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் வாக்குமூலம்; வழங்குவதற்காகவே இன்றையதினம் வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #வசந்தகரன்னாகொட #ஜனாதிபதிஆணைக்குழு #முன்னிலை #இளைஞர்கள்
Spread the love
Add Comment