ரஸ்யாவில் உள்ள அணு உலை ஒன்றிலிருந்து ஐரோப்பா மற்றும் ஸ்கண்டினேவியன் நாடுகளுக்கு அணு கதிர் வீச்சு பரவுகிறது என்னும் குற்றச்சாட்டுக்கு ரஸ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. பின்லாந்து, நோர்வே மற்றும் சுவீடனில் உள்ள அணு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் வழக்கத்தைவிட அதிகமான கதிரியக்கம் வளிமண்டலத்தில் பரவி உள்ளதாகவும் தெரிவித்திருந்தன. மேலும் இந்த கதிரியக்கமானது மேற்கு ரஸ்யாவிலிருந்து வந்ததாக தெரிவித்துள்ள டச்சு சுகாதார அமைப்பு ஏதேனும் அணு உலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருந்தது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஸ்யா மேற்கு ரஸ்யாவில் உள்ள இரண்டு அணு உலைகளும் வழக்கம் போல இயங்குவதாகவும்சிறு கசிவு கூட அங்கு ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது #ரஸ்யா #அணுஉலை #கதிர்வீச்சு #ஐரோப்பா