இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக் டாக், வி சாட் மற்றும் யுசி பிரவுசர் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கே இவ்வாறு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே இடம்பெற்ற மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாக இந்திய மத்திய அரசினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயநர்களின் அந்தரங்க தகவல்கள், விதிகளுக்கு மாறாக செயற்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், குறித்த செயலிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த 59 செயலிகளுக்கான தடையை பிறப்பித்து இந்திய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு மன்கி பாத் நிகழ்ச்சியூடாக மக்களிடையே உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #இந்தியா #சீனசெயலிகளுக்கு #தடை #TikTok