Home உலகம் உலகம் முழுவதும் 1 கோடியே 5 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 1 கோடியே 5 லட்சம் பேருக்கு கொரோனா

by admin

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது.  சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ; தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 42 லட்சத்து 73 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 787 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 57 லட்சத்து 90 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள போதிலும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். #உலகம் #கொரோனா #சிகிச்சை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More