கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் செலுத்தி உள்ள தாக்கம் காரணமாக உலகெங்கிலும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் 15 ஆயிரம் பணிக்குறைப்பினை அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள ஏர் பஸ் நிறுவனத்தில் அலுவலகத்தில் 134,000 பேர் வேலை செய்கின்றார்கள். இந்த பணிக்குறைப்பின் மூலம் பிரித்தானியாவில் மட்டும் 1700 பேர் வேலையினை இழப்பார்கள் எனவும் ஜெர்மன், ஸ்பெயின் மற்றும் ஏனைய பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலையினை இழப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஊழியர் சங்கங்களுடன் இது தொடர்பாக ஏர் பஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான் போக்குவரத்தைப் பொறுத்தவரை 2023 வரை இயல்பு நிலை திரும்புவது கடினம் என்று கூறும் அந்நிறுவனம், ஏற்கெனவே உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது #ஆட்குறைப்பு #ஏர்பஸ் #கொரோனா