195
பாடசாலை மதிலில் தனது இலக்கத்தையும் , கட்சி சின்னத்தையும் கீறியதற்கு மனவருத்தம் தெரிவித்து மதிலுக்கு, புதிதாக சுவர் பூச்சு பூசி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் வி.மணிவண்ணன்.
தாவடி பகுதியில் உள்ள பாடசாலை மதிலில் மணிவண்ணனின் பெயர் பெரிதளவில் வெள்ளை வர்ணத்தில் எழுதி , அருகில் கட்சி சின்னமும், அவரது விருப்பு எண்ணும் வரையப்பட்டிருந்தது. அது தொடர்பில் அறிந்து கொண்ட மணிவண்ணன் , இத்தகைய செயற்பாடுகள் விரும்பதகாத செயற்பாடு என தெரிவித்து , உடனடியாக குறித்த பாடசாலை மதிலுக்கு புதிதாக வர்ணம் பூசி கொடுத்துள்ளார். அத்துடன் தனக்கு ஆதரவு தெரிவிப்போர் , இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நேரங்களில் வீதிகள் உள்ளிட்டவற்றில் பல வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கட்சி சின்னங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் , விருப்பு இலக்கம் என்பவற்றை வரைந்து அசிங்கப்படுத்தி வருவதாக பலரும் குற்றசாட்டுக்களை முன் வைத்து வரும் நிலையில், மணிவண்ணன் அத்தகைய செயற்பாடுகளை கண்டித்து , முன்னுதாரணமாக நடந்து கொண்ட செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். #பாடசாலைமதில் #மனவருத்தம் #மணிவண்ணன் #தேர்தல் #சின்னங்கள்
Spread the love