245
நாட்டு வெடிபொருள் தயாரித்த ஒருவர், வெடிவிபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இயக்கச்சியில் இடம்பெற்றது என்று பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று பளை காவல்துறையினர் கூறினர். #வெடிவிபத்து #வெடிபொருள் #கிளிநொச்சி
Spread the love