இலங்கை பிரதான செய்திகள்

வெடி விபத்து – குண்டு தயாரித்தாரா ?

நாட்டு வெடிபொருள் தயாரித்த ஒருவர், வெடிவிபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இயக்கச்சியில் இடம்பெற்றது என்று பளை  காவல்துறையினர்  தெரிவித்தனர்.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று பளை  காவல்துறையினர் கூறினர்.  #வெடிவிபத்து   #வெடிபொருள் #கிளிநொச்சி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap