200
மருதனார்மடம் – கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையாக நேற்று மாலை இந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டது.
அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று பெறப்படும். அதன் பின்னர் வெடிகுண்டு அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்படும் என்றும் சுன்னாகம் காவல்துறையினர் கூறினர். #மருதனார்மடம் #வெடிகுண்டு #வெடிக்காத
Spread the love