187
நாவலப்பிட்டி, கொத்மலை ஒயாவின் கற்குகை ஒன்றில் இருந்து 99 டெட்டனேட்டர்கள் மற்றும் 8 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வெடிப்பொருட்கள் இன்று மாலை நாவலப்பிட்டி விசேட அதிரடி படையினரால் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நாவலப்பிட்டி, கொத்மலை ஒயாவிற்கு நீராட சென்றவர்களால் குறித்த வெடிபொருட்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நாவலப்பிட்டி விசேட அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவை மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ள நாவலப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #நாவலப்பிட்டி #கொத்மலைஒயா #வெடிபொருட்கள் #மீட்பு
Spread the love