துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் செயலணிக்கு பொருத்தமான தமிழர் ஒருவரும் முஸ்லீம் ஒருவரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதுதொடர்பில் கவனம் செலுத்தியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் முஸ்லீம் மக்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அத்துடன் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த விவகாரம் பேசப்பட்டது. இதன்போது அமைச்சர் டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி தனது முகப் புத்தகத்திலும் இதுதொடர்பில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.
இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்றைய அசை்சரவை கூட்டத்தில் கொண்டு சென்றிருந்ததை அடுத்து குறித்த பிரதிநிதிகளின் பரிந்துரைகளை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்பய ராஜபக்ச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
………………………………….
அழிந்த வாழைகளுக்கு விரைவில் இழப்பீடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு> விசேட அமைச்சரை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து நஷ்ட ஈடு வழங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை மற்றும் பப்பாசிச் செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.
இதனால் குறித்த பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர்.
இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விவசாயிகள் தமது பயிரழிவுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர நடவடிக்கை மேடற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மே மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது குறித்த பயிரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை குறித்த அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் இதற்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விவசாய அமைச்சு மற்றும் அனர்த்தமுகாமைத்தவ அமைச்சு ஆகியன தம்மிடம் ஏற்பாடுகள் இல்லை எனத் தெரிவித்திருந்தன.
இதையடுத்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றதை அடுத்து அதற்கான நிதியை வழங்குவதற்கு தேவையான விசேட அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #டக்ளஸ் #தொல்லியல்செயலணி #தமிழர் #முஸ்லீம் #விவசாயிகள்