வடக்கில் கடந்த 7 மாதங்களில் 2327 kg கஞ்சா போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏனெனில் இளம் பராயத்தை சேர்ந்தவர்கள் அதாவது கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கூடுதலாக இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி வருவதை அவதானிக்க முடிகின்றது
இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து சமூக மட்ட பிரதிநிதிகளுக்கும் உள்ளது எனினும் கடற்படையினரால் பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அதேபோல சமூகமட்ட அமைப்புகளும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். #சிவில்அமைப்பு #மதகுருமார் #சமூகஆர்வலர்கள் #வடக்கு #கடற்படையினர் #போதைப்பொருட்கள்