192
மத ரீதியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வமத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச சர்வமத குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (9) தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன் பிராந்திய இணைப்பாளர் முஹமது உவைஸ் தலைமையில் மன்னார் தனியார் விடுதியில் இடம் பெற்றது.
‘மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு’ எனும் தொனிப்பொருளில் மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற மத ரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு புரிந்துணர்வு மூலம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது .
குறித்த நிகழ்வுக்கு சர்வ மதத் தலைவர்கள் உட்பட அரச அலுவலர்கள் , கிராம அலுவலர்கள் , சமூக காவல்துறைஉத்தியோகஸ்த்கர்கள், ஊடகவியளாலர்கள் ,சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் அண்மைக் கலமாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மத ரீதியான முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் புதிய பிரச்சினைகள் தோற்றம் பெறாமல் பாதுகாப்பது தொடர்பாகவும், அதே நேரத்தில் குறித்த பிரதேச சர்வமத குழுவை நிலை பெறு தன்மையுடைய குழுவாக மாற்றியமைப்பதற்கான விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. #மதரீதியான #சகவாழ்வை #விசேடசெயல்திட்டம் #தேசியசமாதானபேரவை
Spread the love