269
நானாட்டான் பங்கின் தாய்க்கோயிலான புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா திருப்பலி இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 7.15 மணிக்கு பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.கே. தேவராஜா கொடுதோர் அடிகளாரின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியில் மூத்த குரு அருட்பணி. சேவியர் குரூஸ் அடிகளார், மன்னார் மறைமாவட்ட இளைஞர், வழிபாட்டு ஆணைக்குழுக்களின் இயக்குனர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகளார், கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்பணி. எமில் எழில்ராஐ; அடிகளார் மற்றும் தியாக்கோண் ஆகியோரும் கிராம மக்கள்,அரசியல் பிரமுகர்கள் ஆகியொர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #நானாட்டான் #ஆரோக்கியஅன்னை #திருவிழா #திருப்பலி
Spread the love