Home இலங்கைமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்.

மன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்.

by admin
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட உப்புகுளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்கள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை முதல் எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த விடையத்தை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  கில்றோய் பீரிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவ்வாறு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மன்னார் உப்புகுளம் பகுதியில் அவரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை   மீண்டும் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த நபருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உற்பட மூன்று குடும்பத்தினர் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு தங்களுடைய வீடுகளிளேயே சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  #மன்னார் #சுகாதார #சுயதனிமை  #கொரோனா
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More