தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக காணப்பட்டு வருகின்ற நிலையில் அங்கு நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், கடந்த ஜூன் 19-ந் திகதி முதல் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 31-ந் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் 21 மற்றும் 28-ந் திகதிஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஜூலை மாதமும் 1-ந் திகதி முதல் 5-ந் திகதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், 6-வது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் திகதி முதல் 31-ந் திகதி வரை அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 5-ந் திகதிதமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது. #தமிழகம் #ஊரடங்கு #கொரோனா