192
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர்குறிப்பிட்டனர்.
கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டமை மற்றும் 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்று, விக்கெட் கட்டை, இரும்பு குழாய்கள் மற்றும் ஜக்கட் என்பன கைப்பற்றப்பட்டன” என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். #வாள்வெட்டு #வன்முறை #கைது #கத்திக்குத்து
Spread the love