193
கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் முனனிலையில் இன்று (15.07.2020) குறித்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
மாளிகாவத்தையில் மைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் திணைக்களம், நாரா எனப்படும் நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், நர்ட் நிறுவனம் ஆகியவற்றின் பிரதானிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பல நாள் கலங்களின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி களஞ்சியப்படுத்துவதற்கான பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதே குறித்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், கடற்றொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாக பல நாள் கலங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடடியாக தடை செய்ய அமைச்சரவை தீர்மானம்
வடபகுதி கடற்பரப்புகளில் தடைசெய்யப்பட்ட கடற்றொழில்; முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையி்ல் அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை நாளைமுதல் நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டுவந்திருந்தனர்.
குறிப்பாக எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயன்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்தார்.
இதையடுத்த கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #கடலுணவு #ஒப்பந்தம் #நீர்வாழ்உயிரினங்கள் #டக்ளஸ்தேவானந்தா #தடைசெய்யப்பட்ட #கடற்றொழில்
Spread the love