186
இந்தோனேசியாவிற்கு அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேத விவரம் வெளியாகவில்லை. #பப்புவாநியூகினியா #நிலநடுக்கம் #சுனாமி
Spread the love