ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியானது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி இருப்பது மட்டுமன்றி ‘டி செல்’களையும் உருவாக்கி இருப்பது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உலகளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்த சரும் கொரோனா வைரஸினால் உலகளவில் 1 கோடியே 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5.84 லட்சம் பேர் உயிரிழந்துமுள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஸ்யா, பெரு, மெக்சிகோ, தென் ஆபிரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொரோனாவினால் மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றுதான் இதனை தடுக்க ஒரே வழியென நம்பப்படுகின்றது.
இந்தநிலையில் பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ள தடுப்பூசி ஏனையவற்றினைவிட சிறப்பானது என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. .
இந்த தடுப்பூசியை உருவாக்குவதில் பிரித்தானிய அரசும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் உதவிக்கரம் நீட்டி உள்ளன.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் சோதனையில் மிக முக்கியமான மூன்றாவது கட்டம் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டவர்களை இது எப்படி பாதுகாக்கிறது என்பதை ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது இந்த தடுப்பூசியானது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி இருப்பது மட்டுமல்ல, ‘டி செல்’களையும் உருவாக்கி இருக்கிறது என்பதுதான். இது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அந்த வகையில் இந்த தடுப்பூசி இரட்டை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக அமைவது மிகவும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை மட்டும் கொண்டிருந்தால், அந்த நோய் எதிர்ப்புச்சக்தி ஒரு கட்டத்தில் மங்கிப்போகும். ஆனால் ‘டி செல்’கள் அப்படியல்ல. அவை ஆண்டுக்கணக்கில் உடலில் இருக்கும்.
ஆனால் நோய் எதிர்ப்புச்சக்தியையும்,’டி செல்’களையும் உற்பத்தி செய்கின்றது என்பது எ மிகுந்த நம்பிக்கை அளிக்கும் அம்சம். ஏன்றபோதிலும் இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியதிருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் பார்வையாக இருக்கிறது.
‘சிஎச்ஆட்ஆக்ஸ் 1 என்கோவ்-19’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பற்றி அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் கூறுகையில், ‘மூன்றாம் கட்ட சோதனை தொடங்கி இருக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடுகிறபோது அதன் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புச்சக்தி அளவிடப்படும். செயல்திறனும் தெரிய வரும்’ என தெரிவித்துள்ளது
இந்த தடுப்பூசிதான் கொரோனாவை தடுத்து நிறுத்த முதலில் களம் இறங்கும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ள போதும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நீண்டகால நோய் எதிர்ப்புச்சக்தியை வழங்குமா என்பது குறித்துஇன்னும் நிரூபிக்கப்படவில்லை.
அதேவேளை அமெரிக்காவின் தொற்று நோயியல் துறையின் மூத்த நிபுணரான மருத்துவர் ஆன்டனி பௌசி ஹஅமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தடுப்பூசி தயாரித்துவிடும் என நம்புவதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது #ஒக்ஸ்போர்ட் #கொரோனா ,#தடுப்பூசி #எதிர்ப்புச்சக்தி