இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துக் கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில்தான் முதலில் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது டெல்லி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 38, 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் ஒரு நாளில் அதிகபட்சமாகும். இதனால் மொத்த எண்ணிக்கை 10,77,618 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 543 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்துள்ளது.