இலங்கை பிரதான செய்திகள்

நல்லூருக்கு 300 பேருக்கே அனுமதி – காவடி , அங்கப்பிரதஷ்டை உள்ளிட்ட பலவற்றுக்கு தடை

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் 300 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.அங்கப்பிரதஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த சிறப்பு அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்படி தீர்மானத்மை பதில் முதல்வர் அறிவித்தார்.

நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன. இருப்பினும் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும்.

மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல்வர் மேலும் தெரிவித்தார்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #நல்லூர்கந்தசுவாமிஆலயம் #அங்கப்பிரதஷ்டை #காவடி #அன்னதானம் #கொடியேற்றம் #திருவிழா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.