181
வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள் 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 கொள்ளையர்களே நகைகளை கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளனர்.
வாள், கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து தம்மை அச்சுறுத்தி 17 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பில் வட்டுகோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love