கொரோனாவை கட்டுப்படுத்துவோம் உணவு கட்டுப்பாட்டை வெல்வோம் எனும் தொனிப்பொருளில் அன்னமலை விவசாய விரிவாக்கல்பிரிவின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி 2 கிராம சேவையாளர் பிரிவில் நிலக்கடலை அறுவடை விழா இன்று நிலைய பொறுப்பதிகாரி எஸ் .சசிகரன் தலைமையில் இன்று(23) நடைபெற்றது.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட விவசாய பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சார் விவசாய நடைமுறையை இன்றைய விவசாயத்தில் உட்புகுத்தி அதிக விளைச்சல் பெறும் உத்திகளை கையாள வேண்டும் . இரசாயன உரங்கள் , மருந்துகளை போதிய அறிவின்றி பாவிப்பதனால் நஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும் ஆகவே விவசாய திணைக்களத்தின் அறிவுரைகளை வாட்சப் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம் இது பாரிய உதவியாக அமையும் என்பதனில் தெளிவு பெற வேண்டும். என குறிப்பிட்டார்
எமது நாட்டில் பல வழங்கள் நிறைந்துள்ளது விவசாயத்தை எமது நாட்டில் மேற்கொள்வது சவால் நிறைந்த விடயமல்ல ஆனால் சில நுணுக்கங்களை அறிந்து செயற்பட்டால் விவசாயத்தில் அதி கூடிய விளைச்சலை பெறமுடியும்.
இந்த நிகழ்விற்கு களப்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிகார்,விவசாய போதனாசிரியர் எஸ்.எம்.எம்.ஜனித்கான்,பிரிவிற்
மேலும் இடை கால பயிர் செய்கையாக வேளாண்மை அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் பயறு விதைக்கப்பட்டது #கொரோனா #அறுவடைவிழா #விளைச்சல்