தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையகம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை 7 வயது சிறுமி, தூத்துக்குடியில் 14 வயது சிறுமி, மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள தேசிய குழந்தைகள் நல ஆணையகம், தாமாக முன் வந்து விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.
புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களின் போது தமிழக காவல்துறையினர் உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்வது பாராட்டத்தக்கது என்றாலும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இதற்குத் தேசிய குழந்தைகள் நல ஆணையகம் என்றும் உறுதுணையாக இருக்கும். ஊரடங்கு காலத்தில் மட்டும் 14 போக்சோ வழக்குகள் உட்பட 17 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. #சிறுமிகள் #வன்கொடுமை #குழந்தைகள்நலஆணையகம் #விசாரணை #கொரோனா