168
கிளிநொச்சியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுயேட்சை குழு 03 இன் ஆதரவாளர்கள் மீது மற்றுமொரு சுயேட்சை குழுவின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுயேட்சை குழு 3 (வீஸ்மர் சமுதாய முன்னேற்ற கழகம்) இளைஞர் கழக உறுப்பினர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் ஒருவர் அக்கராஜன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என தாக்குதலுக்கு இலக்கான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர் #கிளிநொச்சி #சுயேட்சைகுழு #ஆதரவாளர்கள் #தாக்குதல்
Spread the love