151
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 5400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் (27) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 164 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. #தேர்தல் #தேர்தல்கள்ஆணைக்குழு #முறைப்பாடு #வன்முறை
Spread the love