Home இலங்கைஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்க

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்க

by admin

தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதியால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் சாட்சியாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய   ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்  கடிதம் மூலம் கோரியிருந்தார்.

அதில்  தேர்தல் காலத்தில்   சாட்சியாளர்கள் சாட்சியம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதால் வேட்பாளர்களுக்கு பாரபட்சம் ஏற்படுவதாக மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியிருந்தாா்.

இந்தநிலையில் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி, சாட்சியாளர்களின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு வௌியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்ற போதிலும் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வௌியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். #அரசியல்பழிவாங்கல்   #ஜனாதிபதிஆணைக்குழு  #ஊடகங்கள்  #மகிந்த

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More