ஆந்திர மாநிலம், விசானகப்பட்டிம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ராட்சத பாரந்தூக்கி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பொறியாளர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனா். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் சரக்கு பெட்டகங்களை கையாளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கப்பல்களில் வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்கு அங்கு ராட்சத பாரந்தூக்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தில் நேற்று காலை 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத 70 தொன் எடையைத் தூக்கும் ராட்சத பாரந்தூக்கியை இயக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இந்தப் பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அந்த ராட்சத பாரந்தூக்கி சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பொறியாளர்கள் மற்றும் கீழே பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நவீன் சந்த் தெரிவித்துள்ளாா்.
முதல் கட்ட விசாரணையில் பாரந்தூக்கியின் அடிப்பாகமும், மேல் உள்ள பாகமும் பிரிந்ததால் அதுசரிந்து விழுந்ததாகத் தெரியவந்துள்ளதாக அவா் தொிவித்துள்ளாா். #பாரந்தூக்கி #விசானகப்பட்டிம் #பொறியாளர்கள் #ஹிந்துஸ்தான்