Home இலங்கை பொதுத் தேர்தல் 2020 – மக்கள் சிந்தித்துவாக்களிக்கவேண்டும்’

பொதுத் தேர்தல் 2020 – மக்கள் சிந்தித்துவாக்களிக்கவேண்டும்’

by admin

பொதுத் தேர்தல் 2020 –’எமது பிரதிநிதிகள் எமக்குபொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்’

தமிழ் சிவில் சமூகஅமையம்

Tamil Civil Society Forum

02.08.2020

மீண்டும் ஒருபாராளுமன்றத் தேர்தலைதமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான மூன்றாவதுபொதுத் தேர்தல் இது.  போருக்குப் பின்னரானகாலப்பகுதியில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பின்வரும் மூன்றுவிடயங்களுக்காகமுக்கியமானதாகிறது:

1. தமிழ் மக்களின் அரசியல்,சமூக,பொருளாதாரவேணவாக்களை,நிலைப்பாடுகளை,தேவைகளைசிறிலங்காவிற்குள்ளும் சர்வதேசத்திலும் எடுத்துரைத்தல். குறிப்பாகஅரசியல் தீர்வுமற்றும் பொறுப்புக் கூறலைசாத்தியப்படுத்துவதற்கானசெயன்முறைகளில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகசிறிலங்காவிற்குள்ளும் சர்வதேசத்திலும் செயற்படுதல்.

2. தமிழ் மக்களின் சாத்வீக அற வழிப் போராட்டங்களுக்குதலைமைவழங்கலும் திட்டமிட்டதொடர்ந்தேர்ச்சியானமக்கள் அணிதிரள்வு மூலமாகமாற்றங்களைசாத்தியமாக்கல்

3. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நாளாந்தமற்றும் நீண்டகாலபொருளாதார,சமூகபிரச்சனைகளிற்கு ஸ்ரீலங்காவின் அரசகட்டமைப்பிற்குள்ளும் அதற்குவெளியிலும் தீர்வுகளைகாணுதலும் அதற்கானசமூகமுயற்சிகளுக்குதலைமைத்துவம் வழங்குதலும்.

மேற்சொன்னவற்றில் எமதுபார்வையில் எம்மைபிரதிநிதித்துவப் படுத்தியவரக்ள் ஆற்றியபங்குதொடர்பில் பின்வருமாறுமதிப்பிடுகிறோம்.

முதலாவதுவிடயம் தொடர்பில்: தமிழ் பிரதிநிதிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் சுயாதீனமானசிந்தனையோவேலைத்திட்டமோ இருந்ததாகதெரியவில்லை. யாருடையநலன்களை இவர்கள் பிரதிநித்துவப்படுத்துகிறார்கள் எனமக்கள் கேட்கும் அளவிற்குஎமதுபிரதிநிதிகளின் செயற்பாடுகள் இருந்திருக்கின்றது. அரசியல் தீர்வுதொடர்பில் தான்தோன்றித்தனமானநிலைப்பாடுகள்,மக்களிடம் தேர்தலின் போதுபெறப்பட்டஆணைக்குமுரணானநிலைப்பாடுகள் எனபல்வேறுதவறுகள் நடந்தேறியுள்ளன. பொறுப்புக் கூறலைஒருபண்டமாற்றுப் பொருளாகபாவித்துசர்வதேசவிசாரணைக்கானதமிழரின் நிலைப்பாட்டில் தொய்வுஏற்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதுவிடயம் தொடர்பில்: மக்கள் போராட்டங்களைதமக்கெதிரானபோராட்டங்களாககருதும் அளவிற்கு இங்குநிலைமைமோசமாகமோசமாகஉள்ளது. காணிஅபகரிப்பு,காணாமலாக்கப்பட்டமக்களின் நீதிக்கானதேடல் போன்றவிடயங்களில் அந்தமக்களின் போராட்டங்களைநலினப்படுத்தும் வகையில் எமதுபிரதிநித்துவம் செயற்பட்டுள்ளது.

மூன்றாவதுவிடயம் தொடர்பில்: இது தொடர்பில் எமது இது வரையானபிரதிநித்துவத்திற்குஆர்வமோசிந்தனையோதிட்டமோ இருந்ததாகதெரியவில்லை. கடந்தஅரசாங்கத்தினால் முன்கொண்டுவரப்பட்ட கம்ரேலியதிட்டத்தின் கீழ் தமதுதொகுதிநலன்களைபேணும் விதத்திலானகிள்ளித் தெளிப்புக்களையே எமது பிரதிநிதிகள் செய்தார்கள். செய்யப்பட்டவேலைகள் எவையுமே தமிழ் மக்களின் கட்டமைக்கப்பட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாடியதாக இருக்கவில்லை. வடமாகாண சபை அனுபவம் எமக்கு உணர்த்துமால் போல் இருக்கும் சட்டகத்திற்கு வெளியே சிந்தித்து செய்யப்பட வேண்டிய பொருளாதார சமூக மறுமலர்ச்சிக்கான திட்டம் எதுவேமே இல்லாத செயற்பாட்டு வெறுமையான அரசியலையே எமக்கு எமது பிரதிநிதிகள் எமக்கு தந்திருக்கிறார்கள்.

அப்படியாயின் என்னசெய்வது இந்ததேர்தலில்?

தேசியக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோஅவர்களின் முகவர்கள் அல்லதுஒட்டுக்குழுக்களுக்கோதமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாதுஎன்பதுஎமதுநிலைப்பாடு. மக்களின் அபிவிருத்திசார் தேவைகளைஉபகாரணப்படுத்திஅரசியல் செய்யும் சிங்களபௌத்தஅரசியலின் இந்தத் தமிழ் பேசும் முகவர்கள் தமிழ் தேசியஅரசியல் நீக்கத்தைசெய்வதைதமதுபிரதான இலக்ககாககொண்டவர்கள். அவர்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வேலைவாய்ப்புக்களையோ கிள்ளித் தெளிக்கும் வகையான செயற்திட்டங்களோ கிடைக்குமே அன்றி எமக்கு தேவையான பொருளாதார அபிவிருத்தியைதானும் அவர்களால் பெற்றுதரமுடியாது. தமது எஜமானர்கள் தருவதை வாங்கித் தருவதைத் தவிரசுயமாக பேசி புதிதாக ஒன்றையும் பெற்றுத் தரமாட்டார்கள்.

தமிழ் தேசியஅரசியல் பரப்பில் இது வரைஏகபிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலான எமது மதிப்பீட்டை மேலே சொல்லியிருக்கிறோம். மீண்டும் இவர்கள் வாக்குகேட்டுவருவதால் அவர்களுக்கு வாக்கு அளிப்பதாயின் மேலே குறிப்பிடப்பட்ட சறுக்கல்கள், தவறுகளை அவர்கள் சரிசெய்யும் எண்ணத்தோடு உள்ளார்களா, அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்களின் மாற்றுத் திட்டமென்ன என்பதனை அவர்களின் தேர்தல் காலபரப்புரைகள் மற்றும் விஞ்ஞாபனத்தை வைத்து மக்கள் மதிப்பிட்டுதமது முடிவை எடுக்கவேண்டும் எனநாம் கருதுகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புவிட்டதவறுகளைசுட்டிக்காட்டிதம்மைமாற்றாகமுன்வைக்கும் இரண்டுஅணிகள் பிரதானமாகஎம்முன் உண்டு. ஒன்றுதமிழ் தேசியமக்கள் முன்னணி இரண்டாவது தமிழ் தேசியமக்கள் கூட்டணி. இவர்களுக்கு வாக்களிப்பதாயின் மேற்சொன்ன கட்சிகள் கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கும் விமர்சனங்களைத் தாண்டிஅவர்கள் முன்வைக்கும் மாற்றுயோசனைகள் எவை எனக் கணித்துஅந்தமதிப்பீட்டின் பெயரில் தமது முடிவை தமிழ் மக்கள் எடுக்கவேண்டும் எனநாம் கருதுகிறோம். வெறுமனேவிமர்சனங்கள் மூலமாகமாற்றரசியல் கட்டியமைக்கப்பட முடியாது எனநாம் கருதுகிறோம். மாற்று அரசியல் அவசியமானது ஆனால் அதன் உள்ளடக்கம் போதுமானளவுதெளிவாக பேசப்படவில்லை என்றே நாம் கருதுகிறோம்.

இந்த இடத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் ‘ஒற்றுமை’, ‘ஓரணியில் பேரம் பேச ஆணை’ போன்றகோசங்களைசற்றுஅவதானமாகஅணுகவேண்டும் எனநாம் கேட்டுக் கொள்கின்றோம். தமிழ் தேசியபரப்பைஒருகட்சிமாத்திரம் பிரதிநித்துவப்படுத்துகின்றசூழல் அந்தகட்சிமக்களுக்குபொறுப்பு கூறாமல் எதேச்சாதிகாரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிப்பதை நாம் அனுபவரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ளோம். எனவேதமிழ் தேசியபரப்பில் பலகட்சி பிரதிநித்துவம் பொறுப்புக்கூறலை ஏதுப்படுத்த வாய்ப்பளிக்கலாம். மேலும் தெற்கில் அமையப் போகும் அரசாங்கம் மிகப் பலமானதாக அமையும் என்பது தெளிவாகதெரிகிறது. எனவே அதனுடன் ஆசனங்களின் எண்ணிக்கையை காட்டி பேரம் பேசுவது சாத்தியமில்லை. தமிழ் பிரதிநிதித்துவ அரசியல் பரப்பைமக்கள் மயப்படுத்தும் வகையில்,எமதுபிரதிநிதிகள் எமக்குபொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

(ஒப்பம்) (ஒப்பம்)
அருட்பணிவீ.யோகேஸ்வரன் கலாநிதி. குமராரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூகஅமையம் தமிழ் சிவில் சமூகஅமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More