தேர்தல் சட்டதிட்டங்களை மீறும் வேட்பாளர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் தண்டனைகளுக்கு மேலதிகமாக 7 வருட அரசியல்தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தொிவித்துள்ளாா். மேலும் சகல அரசியல்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளா்கள் அனைவரும் தேர்தல் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக பதுளை தேர்தல் அலுவலகத்துக்கு, இன்று (2) சென்றபோதே, அவா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டோா் பதுனை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாலும் இந்தப் பிரதேசத்தில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டதிட்டங்களைப் பின்பற்றி, தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவா் குற்றம் சுமத்தியுள்ளார். #தேர்தல்சட்டதிட்டங்கள் #வேட்பாளர்கள் #தண்டனை #ரட்ணஜீவன்ஹூல்