கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனையடுத்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உட்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ள அதேவேளை விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏதும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததா என்பது கறுப்பு பெட்டியில் பதிவான தரவுகளின் அடிப்படையில் தெரிய வரும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. #கேரளா #விமானவிபத்து #கறுப்புப்பெட்டி