Home இலங்கைஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…

இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…

by admin

ஒன்பதாவது நாடாளுமன்றின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை (09.08.20) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

களனி ரஜமஹா விகாரையில் நாளை (09.08.20) முற்பகல் 9.00 மணிக்கு மகிந்த ராஜபக்ஸ  புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஸ  இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸ  பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவை திட்டமிடப்படவுள்ளததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More