2015 தேர்தலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் பலர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வன்னியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா மற்றும் எஸ். சிவமோகன், மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசனும் சீனித்தம்பி யோகோஸ்வரன், திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்தன் கோடீஸ்வரன் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வௌியேறி இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இவ்வாறே யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனும் இம்முறை தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் நசீர், எம்.ஐ.எம்.மன்சூர், தேசிய காங்கிரஸில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மொஹமட் இஸ்மாயிலும் மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவும் மற்றும் திருகோணமலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பும் தமது ஆசனத்தை இழந்துள்ளனர்.
ஒரே பார்வையில் முழு விபரம்.
1- Thilanga Sumathipala
2 – Ranil Wickremesinghe
3 – Ravi Karunanayake
3 – Daya Gamage
4 – A.H.M. Fowzie
5- Sujeewa Senasinghe
6 – Hirunika Premachandra
7 – Dulith Wijesekera
8 – Ruwan Wijewardene
9 – Arjuna Ranatunga
10 – Ajith Manapperuma
11 – Vijith Wijayamuni Zoysa
12 – Chathura Senaratne
13 – Edward Gunasekera
14 – Palitha Thewarapperuma
15 – Lakshman WIjemanne
16 – Ajith P. Perera
17 – Nalinda Jayatisse
18 – Vajira Abeywardene
19 – Wijepala Hettiarachchi
20 – Badula lal Bandarigoda
21 – Piyasena Gamage
22 – Lakshman Yapa Abeywardene
23 – Manoj Sirisena
24 – Niroshan Premaratne
25 – Sunil Handunetti
26 – Nihal Gallapatti
27 – S.B. Navinna
28 – Tharanath Basnayake
29 – T. B. Ekanayake
30 – Akila Viraj Kariyawasam
31 – Indika Bandaranayake
32 – Palitha Range Bandara
33 – Shantha Abeysekera
34 – Weerakumara Dissanayake
35 – S.A. Muthukumaran
36 – Chandrani Bandara
37 – P. Harrison
38 – Chandima Gamage
39 – Nalaka Kolonne
40 – Sydney Jayaratne
41 – Lakshman Seneviratne
42 – Ravi Samaraweera
43 – Padma Udaya Shantha Gunasekera
44 – Sumedha G. jayasena
45 – Ananda Kumarasiri
46 – Navin Dissanayake
47 – k.K. Piyadasa
48 – Mayilvaganam Thilakaraj
49 – Lakshman Wasantha Perera
50 – Wasantha Aluwihare
51 – Ranjith Aluwihare
52 – Sandheep Samarasinghe
53 – Thusitha Wijemanne
54 – Dunesh Gankanda
55 – Karunaratne Paranavithane
56 – A.A. Wijetunge
57 – S. Yogeswaran
58 – Gnanamuthu Sivanesan
59 – Ali Zahir Moulana
60 – Ameer Ali
61 – Susantha Punchi Nilame
62 – Abdula Maharoof
63 – Vijayakala Maheswaran
64 – Mavai Senathiraja
65 – E. Saravanabawan
66 – Anoma Gamage