உலகம் பிரதான செய்திகள்

 கொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட  பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது

கொங்கொங் சுயாதீன ஆளுகையை குறைவாக மதிப்பிடும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கேரி லாம் உட்பட   கொங்கொங்  மற்றும் சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு  அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை    இன்று வெளியிட்டுள்ள  அமெரிக்கா நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் மனூஷின்,   கொங்கொங்  மக்களுக்கு அமெரிக்கா  உறுதுணையாக  நிற்கும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்பு கொங்கொங்  புதிய பாதுகாப்பு சட்டத்தை ,  சீனா  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை பிரித்தானியா , அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சர்ச்சையாக பார்க்கப்பட்ட நிலையில், கொங்கொங்கில் உள்ள பிரித்தானிய  வம்சாவளியினருக்கு குடியிரிமை வழங்குவதாக பிரித்தானிய அரசு சலுகை அறிவித்தது. இதேபோன்றே அவுஸ்திரேலியாவும், கனடாவும் அறிவித்தன.

இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொங்கொங்குக்கு வழங்கி வந்த வர்த்த சிறப்பு அந்தஸ்தை பறித்த அமெரிக்கா அதன் தொடர்ச்சியாக தற்போது அந்நாட்டின் முக்கிய பிரபலங்கள் மீதான தடையை  அறிவித்துள்ளது.

இதன்படி கொங்கொங்  தலைமை நிர்வாகி கேரி லாம், அந்த பிராந்திய காவல் ஆணையாளர் கிறிஸ் டாங், அரசியல் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்துள்ளது.

கொங்கொங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சீன பெருநிலப்பகுதியிடம் ஒப்படைக்க வகை செய்யும் தலைமை நிர்வாகி கேரி லாமின் நடவடிக்கை அந்த பிராந்தியத்தில் கடுமையான எதிர்ப்புணர்வை தூண்டியதுடன் மாதக்கணக்கில் போராட்டங்கள் ஏற்பட காரணமாக இருந்தது என அவருக்கு எதிரான நடவடிக்கையை விவரிக்கும் அமெரிக்க நிதித்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது #கொங்கொங்  #கேரிலாம்  #சீனா #அமெரிக்கா #தடை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap